பெங்களூருவில் பிளக்ஸ்,பேனர்கள் வைக்க அனுமதி இல்லை;மாநகராட்சி தலைமை கமிஷனர் அறிவிப்பு
பெங்களூருவில் பிளக்ஸ்,பேனர்கள் வைக்க அனுமதி இல்லை
பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ் குப்தா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
பெங்களூருவில் இனிமேல் பிளக்ஸ், பேனர்கள் வைப்பதற்கு அனுமதி கிடையாது. எந்த ஒரு பிரபலமானவர்களாக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பெங்களூரு நகரில் தேவையில்லாமல் பிளக்ஸ், பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தால், அதுபற்றி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட மாநகராட்சி மண்டலங்களுக்கு தகவல் தெரிவிக்கலாம். நகரில் வைக்கப்படும் விளம்பர பேனர்கள் பற்றி உரிய கவனம் செலுத்தும்படியும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பிளக்ஸ், பேனர்கள், விளம்பர பேனர்கள் வைக்கப்படுவதை கண்காணிக்க தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
பேனர்கள் வைத்தவர்கள் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து வழக்குப்பதிவு செய்யப்படும். மாநகராட்சி சார்பில் பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. பெங்களூரு நகரின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக, அனைத்து தரப்பினரின் ஆலோசனைகளும் பெறப்பட உள்ளது. மக்கள் வழங்கும் ஆலோசனைகளை பரிசீலித்து பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
இவ்வாறு கவுரவ் குப்தா கூறினார்.
Related Tags :
Next Story