வாகன திருட்டில் கைதான முதியவர் பற்றி பரபரப்பு தகவல்கள் போலீஸ்காரராக பணியாற்றியவர் திருடனாக மாறினார்


வாகன திருட்டில் கைதான முதியவர் பற்றி பரபரப்பு தகவல்கள் போலீஸ்காரராக பணியாற்றியவர் திருடனாக மாறினார்
x
தினத்தந்தி 24 Feb 2022 1:48 AM IST (Updated: 24 Feb 2022 1:48 AM IST)
t-max-icont-min-icon

வாகன திருட்டில் கைதான முதியவர் பற்றி பரபரப்பு தகவல்கள்

பெங்களூரு: 

கேரள முதியவர் கைது

பெங்களூரு மைசூரு ரோட்டில் உள்ள கார் ஷோரூமுக்கு வந்த முதியவர் ஒருவர் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த ஒரு காரை திருடி சென்று இருந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் பேடரஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் காரை திருடியதாக கேரளாவை சேர்ந்த நசீர் அகமது இம்ரான் என்கிற பிலகல் நசீர்(வயது 61) என்பவரை பேடரஹள்ளி போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து திருடப்பட்ட கார், 2 ஸ்கூட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது.

மகன் மருத்துவ செலவுக்கு...

இந்த நிலையில் கைதான நசீர் அகமது பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது நசீர் அகமது பக்ரைன் நாட்டில் 9 ஆண்டுகள் போலீஸ்காரராக பணியாற்றி உள்ளார். பின்னர் அவர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு கேரளாவுக்கு வந்துள்ளார். இந்த நிலையில் நசீரின் மகன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அவரின் மருத்துவ சிகிச்சைக்கு அதிகளவில் பணம் தேவைப்பட்டு உள்ளது.

இதனால் நசீர் வாகன திருட்டில் ஈடுபட்டு உள்ளார். கடந்த 2008-ம் ஆண்டு வாகன திருட்டில் ஈடுபட்டதாக அசோக்நகர் போலீசாரால் கைது செய்யப்பட்ட நசீர் ஜாமீனில் வந்துள்ளார். ஆனாலும் அவர் தொடர்ந்து வாகன திருட்டில் ஈடுபட்டு வந்தது அம்பலமாகி உள்ளது.

Next Story