கடையில் இருந்த பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு
இரணியல் அருகே கடையில் இருந்த பெண்ணிடம், சிகரெட் வாங்குவது போல் நடித்து 3 பவுன் தங்கசங்கிலியை பறித்து சென்ற 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
திங்கள்சந்தை:
இரணியல் அருகே கடையில் இருந்த பெண்ணிடம், சிகரெட் வாங்குவது போல் நடித்து 3 பவுன் தங்கசங்கிலியை பறித்து சென்ற 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
மளிகை கடை
இரணியல் அருகே உள்ள வில்லுக்குறி தினவிளை பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மனைவி லதா (வயது54). இவர் ஞாறோடு பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை லதா கடையில் இருந்தபோது ஒரு மோட்டார் சைக்கிளில் டிப்டாப் உடை அணிந்த 2 வாலிபர்கள் வந்தனர். மோட்டார் சைக்கிளின் பின்னால் உட்கார்ந்து இருந்த வாலிபர் கீழே இறங்கி மளிகை கடைக்கு சென்று லதாவிடம் சிகரெட் கேட்டார்.
3 பவுன் சங்கிலி பறிப்பு
லதா சிகரெட் எடுப்பதற்காக கடை உள்ேள செல்ல திரும்பினார். அப்போது அவர் கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை வாலிபர் பறித்தார்.
உடனே சுதாரித்துக்கொண்ட லதா தங்க சங்கிலியை கெட்டியாக பிடித்தவாறு திருடன்... திருடன்... என்று கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் வாலிபர் தங்கசங்கிலியை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறி உடன்வந்தவருடன் மின்னல் வேகத்தில் சென்று மறைந்தார்.
விசாரணை
இதுபற்றி லதா இரணியல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி சென்ற 2 வாலிபர்களையும் தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story