காலப்போக்கில் தி.மு.க.வில் அ.தி.மு.க. சங்கமம் ஆகிவிடும்-அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி
காலப்போக்கில் தி.மு.க.வில் அ.தி.மு.க. சங்கமம் ஆகிவிடும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.
மதுரை,
மதுரை விமான நிலையத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நிருபர்களிடம் கூறுகையில், “நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான ஓட்டுகளில் 80 சதவீதம் தி.மு.க.வுக்கு கிடைத்துள்ளது. தமிழகத்தை பொறுத்தமட்டில் திராவிட இயக்கங்கள்தான். அதில் தி.மு.க.வின் சேவை தமிழகத்திற்கு தேவை. அதிலும் குறிப்பாக முதல்-அமைச்சரின் பணி இன்னும் பல ஆண்டுகளுக்கு மக்களுக்கு தேவையாக இருக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், 30 முதல் 40 சதவீத இடங்களில் அ.தி.மு.க. டெபாசிட்டை இழந்துள்ளது. அதற்கு அ.தி.மு.க. தலைமை சரியாக இல்லை என்பதே காரணம். மேலும் இருக்கக்கூடிய தொண்டர்கள் எல்லாம் தாய்க்கழகமான தி.மு.க.வில் இணைந்து வருகிறார்கள். காலப்போக்கில் அ.தி.மு.க., தி.மு.க.வில் சங்கமம் ஆகிவிடும்” என்றார்.
Related Tags :
Next Story