ஆயுதப்படை போலீஸ்காரர் தற்கொலை
மதுரையில் ஆயுதப்படை போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர் பாலு. இவரது மகன் தனுஷ்கொடி (வயது 31). கடந்த 2013-ம் ஆண்டு போலீஸ் வேலையில் சேர்ந்த இவர் மதுரை ஆயுதப்படை போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவியை பிரிந்து செல்லூர் பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் குடும்பத்தகராறில் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று விஷம் குடித்து அவர் மயங்கி கிடந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று தனுஷ்கொடி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story