ஆக்கிரமிப்பு சம்பந்தமாக அதிகாரிகளிடம் மனு அளித்தபின்புதான் வழக்கு தொடர வேண்டும்-மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் அறிவுரை
ஆக்கிரமிப்பு சம்பந்தமாக அதிகாரிகளிடம் மனு அளித்தபின்பு தான் வழக்கு தொடர வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் அறிவுரை வழங்கினார்.
மதுரை,
ஆக்கிரமிப்பு சம்பந்தமாக அதிகாரிகளிடம் மனு அளித்தபின்பு தான் வழக்கு தொடர வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் அறிவுரை வழங்கினார்.
ஐகோர்ட்டில் மனு
மதுரை மாவட்டம் சீல்நாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள கண்மாய் ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி சந்திரன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், கிராமங்களில் உறவினர்களுக்கு இடையே ஏற்படும் நடைபாதை பிரச்சினை, ஆக்கிரமிப்பு போன்றவை சம்பந்தமாக ஐகோர்ட்டுகளில் பொது நல வழக்குகள் தொடரப்படுகின்றன.
ஆனால் இந்த வழக்குகள் சிவில் கோர்ட்டுகளில்தான் தொடரப்பட வேண்டும். ஐகோர்ட்டுகளில் தாக்கல் செய்வதை ஏற்க இயலாது.
அதிகாரிகளிடம் மனு அளிக்க வேண்டும்
கிராமங்களில் ஆக்கிரமிப்பு சம்பந்தமாக தாசில்தாரிடம் மனு அளிக்க வேண்டும். அதன் பின்பு கலெக்டரிடம் மனு கொடுக்க வேண்டும். அவர்கள் நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் கோர்ட்டில் வழக்கு தொடரலாம் என அறிவுறுத்தினர். பின்னர் இந்த வழக்கை ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story