வாசுதேவநல்லூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு சாவு
இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
வாசுதேவநல்லூர்:
வாசுதேவநல்லூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
இளம்பெண்
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகேயுள்ள தேசியம்பட்டி என்ற நாரணபுரம் பாபநாச கடை தெருவைச் சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 25). இவரது மனைவி கவுசல்யா (20). இருவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
கவுசல்யாவிற்கு பெண் குழந்தை பிறந்து இரண்டு வாரத்தில் இறந்து விட்டது. மேலும் அவருக்கு அடிக்கடி வயிறு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த கவுசல்யா கடந்த 12-ந்தேதி மதியம் வீட்டில் மின்விசிறி மாட்டும் கொக்கியில் கயிற்றால் தூக்கு போட்டு தொங்கியுள்ளார்.
சாவு
இதனை அறிந்ததும் அக்கம்பக்கத்தினர் வந்து கவுசல்யாவை மீட்டு வாசுதேவநல்லூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன்பிறகு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து கவுசல்யாவின் தந்தை மாரி வாசுதேவநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
திருமணமாகி 2 ஆண்டுகளில் கவுசல்யா தற்கொலை செய்து கொண்டதால் இதுகுறித்து சங்கரன்கோவில் உதவி கலெக்டர் விசாரணை நடத்துகிறார். மேலும் புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் விசாரணை நடத்தினார்.
Related Tags :
Next Story