நெல்லை: வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


நெல்லை: வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 24 Feb 2022 2:19 AM IST (Updated: 24 Feb 2022 2:19 AM IST)
t-max-icont-min-icon

வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

நெல்லை:
நெல்லை மேலப்பாளையம் நாகம்மாள்புரம் பகுதியை சேர்ந்தவர் மாடசாமி மகன் சரவணன் என்ற சப்பாத்தி சரவணன் (வயது 24). இவர் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் மேலப்பாளையம் போலீசாரால் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் சரவணனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடும்படி, நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் துரை குமாருக்கு, மாநகர கிழக்கு போலீஸ் துணை கமிஷனர் சுரேஷ்குமார், மேலப்பாளையம் உதவி கமிஷனர் பாலமுருகன் ஆகியோர் பரிந்துரை செய்தனர். போலீஸ் கமிஷனர் அதனை ஏற்று சரவணனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து சுப்பிரமணியன், சரவணனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான உத்தரவு நகலை சிறை அதிகாரிகளிடம் நேற்று ஒப்படைத்தார்.

Next Story