மங்களூருவில் உரூஸ் திருவிழாவில் ராட்டினம் உடைந்தது; சிறுவர்கள் உள்பட 10 பேர் காயம்


மங்களூருவில் உரூஸ் திருவிழாவில் ராட்டினம் உடைந்தது; சிறுவர்கள் உள்பட 10 பேர் காயம்
x
தினத்தந்தி 24 Feb 2022 2:41 AM IST (Updated: 24 Feb 2022 2:41 AM IST)
t-max-icont-min-icon

உல்லால் பகுதியில் உரூஸ் திருவிழாவில் ராட்டினம் உடைந்து சிறுவர்கள் உள்பட 10 பேர் காயம் அடைந்தனர்.

மங்களூரு:

உரூஸ் திருவிழா

  தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே உல்லால் பகுதியில் பிரசித்தி பெற்ற பள்ளிவாசல் உள்ளது. கொரோனா காரணமாக பள்ளிவாசலில் கடந்த 2 ஆண்டுகளாக உரூஸ் திருவிழா நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் முதல் பள்ளிவாசலில் உரூஸ் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி அங்கு ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

  மேலும் குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்களும் அமைக்கப்பட்டு உள்ளன. நேற்று முன்தினம் இரவு திருவிழாவின் போது மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அங்குள்ள ராட்டினம் ஒன்றில் குழந்தைகள் சுற்றிக் கொண்டிருந்தனர்.

10 பேர் காயம்

  அப்போது எதிர்பாராதவிதமாக ராட்டினம் உடைந்து விழுந்தது. இந்த விபத்தில் ராட்டினத்தில் இருந்த கேரளாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், சிறுவர்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் கீழே விழுந்து படுகாய அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மங்களூரு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

  இந்த சம்பவம் தொடர்பாக உல்லால் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர்சேதம் ஏற்படவில்லை.

Next Story