நெல்லையில் காலாவதி தேதி குறிப்பிடாத குளிர்பானங்கள் பறிமுதல்
நெல்லையில் காலாவதி தேதி குறிப்பிடாத குளிர்பானங்களை பறிமுதல் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்
நெல்லை:
நெல்லையில் காலாவதி தேதி குறிப்பிடாத குளிர்பானங்களை பறிமுதல் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
அதிகாரிகள் ஆய்வு
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள அனைத்து உணவு தயாரிப்பு கூடங்கள், விற்பனை நிலையங்கள் போன்றவற்றில் உணவு பாதுகாப்பு சட்டத்தை பின்பற்றி உணவுப்பொருட்கள், குளிர்பானங்கள் தயாரித்து விற்கப்படுகிறதா? என உணவு பாதுகாப்பு அலுவலர்கள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கரலிங்கம் தலைமையில் அதிகாரிகள் நேற்று பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் பகுதியில் உள்ள ஒரு குளிர்பான தயாரிப்பு ஆலையில் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது அங்கு தயாரிப்பு தேதி, காலாவதி தேதி குறிப்பிடாமல் இருந்த 576 குளிர்பான பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து அழித்தனர்.
அபராதம்
மேலும் பிரபல குளிர்பான நிறுவனத்தின் பெயரில் போலியாக லேபிள் தயாரித்து குளிர்பான பாக்கெட்டுகளில் ஒட்டி விற்றதும் தெரிய வந்தது. இதுதொடர்பாக நம்பித்துரை என்பவருக்கு உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது.
இதேபோல பாளையங்கோட்டை மண்டல பகுதியில் உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கரலிங்கம் தலைமையிலான குழுவினர் ஆய்வு நடத்தி, தயாரிப்பு தேதி, காலாவதி தேதி குறிப்பிடாமல் இருந்த 76 குளிர்பான பாட்டில்களையும் பறிமுதல் செய்து அழித்தனர்.
Related Tags :
Next Story