கட்டிட தொழிலாளி கொலையில் 5 பேர் கைது
பிறந்த நாள் கொண்டாட்ட தகராறில் கட்டிட தொழிலாளி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை,
பிறந்த நாள் கொண்டாட்ட தகராறில் கட்டிட தொழிலாளி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
தொழிலாளி கொலை
மதுரை சிக்கந்தர் சாவடி மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மகன் பசுபதி கண்ணன் (வயது 27). கட்டிட தொழிலாளி. கடந்த 21-ந் தேதி இரவு இவர் சிக்கந்தர்சாவடி ஓடைப்பள்ளம் பகுதியில் அரிவாள் வெட்டு காயங்களுடன் கிடந்தார். அவரை மீட்டு மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது பசுபதிகண்ணன் ஆஸ்பத்திரிக்கு வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
5 பேர் கைது
அதில் மதுரை பாசிங்காபுரத்தை சேர்ந்த அஜீத் (25), பாரதி (23), பிரதாப் (22), செல்லப்பாண்டி (22), நம்பிராஜன் (24) ஆகிய 5 பேர் பசுபதி கண்ணனை கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அதில் எங்கள் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவருக்கு சிக்கந்தர் சாவடியில் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அப்போது அங்கு வந்த பசுபதி கண்ணன் எங்கள் பகுதிக்கு ஏன் வந்து பிறந்த நாள் கொண்டாடுகிறீர்கள்? என்று தகராறு செய்தார். இதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் அவரை அரிவாளால் கொன்று விட்டு தப்பி சென்றது ெதரிய வந்தது.
இதற்கிடையே கொலையான பசுபதி கண்ணனின் உறவினர்கள் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய கோரியும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு ேவலை வழங்க வேண்டும் என கோரி மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
Related Tags :
Next Story