விக்கிரமசிங்கபுரம்:வெவ்வேறு இடங்களில் 2 பேர் தற்கொலை


விக்கிரமசிங்கபுரம்:வெவ்வேறு இடங்களில்  2 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 24 Feb 2022 2:52 AM IST (Updated: 24 Feb 2022 2:52 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரமசிங்கபுரம் பகுதியில் வெவ்வேறு இடங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்

விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் பகுதியில் வெவ்வேறு இடங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
கூலி தொழிலாளி
விக்கிரமசிங்கபுரம் அம்மன் கோவில் சன்னதி தெருவைச் சேர்ந்தவர் மகேசுவரன் (வயது 42). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி பார்வதி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, மகேசுவரனை விட்டு பிரிந்து பார்வதி குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் மகேசுவரன் தனது வீட்டில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
விக்கிரமசிங்கபுரம் அருகே ஆலடியூர் வலசை தெருவைச் சேர்ந்தவர் முருகன் (78). இவருக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் மனமுடைந்த அவர் சம்பவத்தன்று தனது வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார்.
உடனே அவருக்கு அம்பை அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவில் முருகன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story