நெல்லை: பூட்டிய வீட்டில் நகை திருடிய வாலிபர் கைது


நெல்லை: பூட்டிய வீட்டில் நகை  திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 24 Feb 2022 3:09 AM IST (Updated: 24 Feb 2022 3:09 AM IST)
t-max-icont-min-icon

பூட்டிய வீட்டில் நகை திருடிய வாலிபர் கைது செய்தனர்

 நெல்லை:
பாளையங்கோட்டை மகாராஜ நகர் பகுதியை சேர்ந்தவர் மந்திரம் (வயது 40). இவர் சம்பவத்தன்று கதவை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டார். பின்னர் சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. பின்னர் பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 11 கிராம் தங்க நகை திருடுப்போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் ஐகிரவுண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த இம்ரான் (33) என்பவர் நகையை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நேற்று இம்ரானை கைது செய்தனர்.

Next Story