நெல்லையில் பிடிபட்ட 60 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை
நெல்லையில் பிடிபட்ட 60 நாய்களுக்கு கருத்தடை அறுவடை சிகிச்சை செய்யப்பட்டது
நெல்லை:
நெல்லையில் பிடிபட்ட 60 நாய்களுக்கு கருத்தடை அறுவடை சிகிச்சை செய்யப்பட்டது.
பொதுமக்களுக்கு இடையூறு
நெல்லையில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. நெல்லை அரசு ஆஸ்பத்திரியிலும் நாய்க்கடிக்கு பலர் சிகிச்சை பெறுகின்றனர். நெல்லை அரசு ஆஸ்பத்திரி மற்றும் பல்நோக்கு மருத்துவமனை வளாகத்திலும் நாய்கள் அதிகளவில் சுற்றி திரிந்தன. இதனால் அங்கு சிகிச்சைக்கு செல்லும் நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டது.
இதையடுத்து மாநகர நல அலுவலர் ராஜேந்திரன் மேற்பார்வையில், சுகாதார ஆய்வாளர் சங்கர நாராயணன் தலைமையில், சுகாதார பணியாளர்கள் மற்றும் மதுரையைச் சேர்ந்த நாய் பிடிக்கும் தனியார் அமைப்பு ஊழியர்கள் இணைந்து நேற்று நெல்லை அரசு மருத்துவமனை வளாகத்தில் சுற்றி திரிந்த 38 நாய்களை பிடித்தனர்.
அறுவை சிகிச்சை
தொடர்ந்து பல்நோக்கு மருத்துவமனை வளாகம், சீனிவாச நகர், சரண்யா நகர், தென்றல் நகர், ரெயில் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்த நாய்களை பிடித்தனர். மொத்தம் பிடிபட்ட 60 நாய்களை நெல்லை அரசு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று, கருத்தடை அறுவை சிகிச்சை செய்தனர். தொடர்ந்து அவற்றை டாக்டர்கள் கண்காணிப்பில் வைத்தனர்.
இதேபோன்று நெல்லையில் பல்வேறு இடங்களில் சுற்றி திரிகிற தெருநாய்களை பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
Related Tags :
Next Story