சென்னையில் பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் குறைகள் வாட்ஸ்-அப் மூலம் தீர்வு


சென்னையில் பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் குறைகள் வாட்ஸ்-அப் மூலம் தீர்வு
x
தினத்தந்தி 24 Feb 2022 2:38 PM IST (Updated: 24 Feb 2022 2:38 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் குறைகள் வாட்ஸ்-அப் மூலம் பொதுமக்களுக்கான பாஸ்போர்ட் தொடர்பான குறைகளை தீர்க்கும் நிகழ்ச்சி நடந்தது.

சுதந்திர இந்தியா தனது 75-வது ஆண்டில் காலெடுத்து வைக்கும் ‘இந்தியா-75’ (‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’) நிகழ்ச்சியை வெகு விமர்சையாக கொண்டாடும் வகையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உத்தரவை ஏற்று சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில் கடந்த 21-ந்தேதியிலிருந்து வருகிற 27-ந்தேதி வரை ஒரு வாரம் பொதுமக்கள் நலன் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. அந்தவகையில் வாட்ஸ்-அப் எண் மூலம் மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பொதுமக்களுக்கான பாஸ்போர்ட் தொடர்பான குறைகளை தீர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.கோவேந்தன் கலந்து கொண்டு, பொதுமக்களின் குறைகளை கேட்டு தீர்த்து வைத்தார். நிகழ்ச்சியையொட்டி, இலவச மருத்துவ முகாம் மற்றும் புரசைவாக்கம் அழகப்பா பள்ளி மாணவர்களுடன் மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.கோவேந்தன் கலந்து கொண்டு இந்திய வெளியுறவு கொள்கை குறித்த தகவல் அளித்து பேசினார்.

தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) ஓவிய போட்டிக்கான பரிசளிப்பு விழா, நாளை 25-ந்தேதி சென்னை சாலிகிராமத்தில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜூவால் தலைமையில் கண் மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. 26-ந்தேதி தாம்பரம் போலீஸ் கமிஷனர் ரவி தலைமையில் கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மரம் நடும் விழா நடக்கிறது. வருகிற 27-ந்தேதி மாநகராட்சி கமிஷனர் ககன் தீப் சிங் பேடி தலைமையில் பெசன்ட் நகர் கடற்கரை சுத்தப்படுத்தப்படுகிறது.

இவ்வாறு மண்டல பாஸ்போர்ட் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


Next Story