61-வது வார்டில் வெற்றி: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் முதல் பெண் கவுன்சிலர்


61-வது வார்டில் வெற்றி: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் முதல் பெண் கவுன்சிலர்
x
தினத்தந்தி 24 Feb 2022 3:57 PM IST (Updated: 24 Feb 2022 3:57 PM IST)
t-max-icont-min-icon

பெருநகர சென்னை மாநகராட்சியின் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. சென்னை மாநகராட்சியின் 61-வது வார்டில் தி.மு.க. கூட்டணியினான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளராக போட்டியிட்ட பாத்திமா அகமது வெற்றி பெற்றுள்ளார்.

பாத்திமா  சென்னையில் அக்கட்சியின் சார்பில் களம் இறக்கப்பட்ட முதல் பெண் வேட்பாளராவர். அவர் 6,347 வாக்குகள் பெற்றார். அக்கட்சியின் முதல் பெண் கவுன்சிலர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

சென்னையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக குரல் கொடுத்த பாத்திமா கூறுகையில், ‘எனது வார்டில் இளைஞர்கள் உள்ளனர். எனவே இளைஞர் முன்னேற்றத்துக்கு தேவையான பல நடவடிக்கைகள் மேற்கொள்வேன். சமூக சமத்துவம் மற்றும் மத நல்லிணக்கத்துகாக உழைப்பேன்’, என்றார்.
1 More update

Next Story