வியாசர்பாடியில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
வியாசர்பாடியில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
கல்லூரி மாணவி சாவு
வியாசர்பாடி ஜான் கென்னடி நகரைச் சேர்ந்தவர் பிரதாப் குமார். இவரது மகள் ஹேமாவதி (வயது 22). இவர் செங்குன்றத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 3-ம் ஆண்டு படித்து வந்தார் இந்த நிலையில் நேற்று முன்தினம் அவரது தாய் வேலைக்கு சென்ற பின்னர், தனி அறையில் இருந்த ஹேமாவதி திடீரென மின்விசிறியில் தூக்குப்போட்டார்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் தூக்கில் தொங்கிய அவரை மீட்டு சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ஹேமாவதியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வியாசர்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் சாவு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சினிமா கலைஞர்
அதே போல், சென்னை தியாகராய நகர், ஸ்ரீரணி புரத்தை சேர்ந்தவர் சூர்ய நாராயணன் (வயது 38). இவரது மனைவி ஆதிலட்சுமி (35). இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். சூர்ய நாராயணன் சினிமாவில் ஒளிப்பதிவு கலைஞராக ஆக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் அவர் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனக்குத்தானே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த பாண்டிபஜார் போலீசார் சூர்ய நாராயணனின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் குடும்பத்தகராறு காரணமாக சூர்ய நாராயணன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story