திருவாலங்காடு அருகே வீடு புகுந்து மூதாட்டியை தாக்கிய நபர் அடித்துக்கொலை
திருவாலங்காடு அருகே மூதாட்டியை தாக்கிய நபரை பொதுமக்கள் அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாக்குதல்
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்த தொழுதாவூர் பகுதியில் வசித்து வருபவர் அருள்முருகன். இவர் அந்த பகுதியின் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இவரது தாயார் சரஸ்வதி (வயது 68).
நேற்று முன்தினம் இவர் வீட்டில் இருந்தபோது மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்து உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த சரஸ்வதியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் சரஸ்வதியை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை
மூதாட்டியை தாக்கிய நபரை பொதுமக்கள் அடித்து, உதைத்து மின்கம்பத்தில் கட்டி வைத்ததாக கூறப்படுகிறது. ஊர் மக்கள் தாக்கியதில் அந்த நபர் இறந்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்து விரைந்து வந்த போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார், மாவட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு சாய்பிரிணித் ஆகியோர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். இறந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர், இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story