மினி லாரியில் புகையிலை பொருட்கள் கடத்தல்: 2 பேர் கைது


மினி லாரியில் புகையிலை  பொருட்கள் கடத்தல்: 2 பேர் கைது
x
தினத்தந்தி 24 Feb 2022 7:43 PM IST (Updated: 24 Feb 2022 7:43 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் மினி லாரியில் புகையிலை பொருட்களை கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் மினி லாரியில் புகையிலை பொருட்களை கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மினி லாரியில் கடத்தல்
தூத்துக்குடி ஊரக துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சம்பத் மேற்பார்வையில் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றம் போலீசார் தூத்துக்குடி-எட்டயபுரம் ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். 
அப்போது, அந்த வாகனத்தில் வந்த சென்னை மாங்காட்டை சேர்ந்த ராஜேந்திரன் மகன் மணிகண்டன் (30), சென்னை பூந்தமல்லியை சேர்ந்த ஜோதி மகன் வேல் முருகன் (23) ஆகியோர் சட்டவிரோத விற்பனைக்காக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தியது தெரியவந்தது.
2 பேர் கைது
இதைத் தொடர்ந்து போலீசார் மணிகண்டன், வேல்முருகன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். 
அவர்களிடம் இருந்து 3 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 2 ஆயிரத்து 100 புகையிலை பாக்கெட்டுகள், 2 செல்போன்கள், ரூ.1 லட்சத்து 24 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் மினிலாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 
இது குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story