பால்குட ஊர்வலம்
பக்தர்கள் வேல் காவடி, மயில் காவடி, பால் காவடி, புஷ்ப காவடி போன்றவற்றுடன் அலகு குத்திய பக்தர்கள் பால்குடம் சுமந்த வண்ணம் சிறுவாபுரி கோவிலுக்கு சென்று சிறப்பு அபிஷேகம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி தமிழர் காலனியில் உள்ள அறுபடை வீடு முருக பக்தர்கள் பேரவை சார்பில் 30-ம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. இதையொட்டி சிறுவாபுரி முருகனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. கிராம கோவில்களில் வாடை பொங்கல் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை இரவு சிறப்பு பதி பூஜை நடைபெற்றது. நேற்று விடியற்காலை காப்பு கட்டி விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் வேல் காவடி, மயில் காவடி, பால் காவடி, புஷ்ப காவடி போன்றவற்றுடன் அலகு குத்திய பக்தர்கள் பால்குடம் சுமந்த வண்ணம் சிறுவாபுரி கோவிலுக்கு சென்று சிறப்பு அபிஷேகம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழர் காலனி கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
Related Tags :
Next Story