தாளவாடி அருகே தாளவாடி அருகே கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


தாளவாடி அருகே  தாளவாடி அருகே கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற  500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 24 Feb 2022 8:58 PM IST (Updated: 24 Feb 2022 8:58 PM IST)
t-max-icont-min-icon

தாளவாடி அருகே கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

தாளவாடி அருகே உள்ள மல்லன்குழி கிராமத்தில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தாளவாடி குடிமைப்பொருள் தனி வருவாய் ஆய்வாளர் தர்மராஜுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அதிகாரிகள் அங்கு சென்று ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு சாலையோரத்தில் கர்நாடக பதிவு எண் கொண்ட ஒரு சரக்கு வேன் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அதன் பின்பகுதியில் பார்த்தபோது ஏராளமான மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை பிரித்து பார்த்தபோது அதில் 500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. மல்லன்குழி கிராமத்தில் இருந்து கர்நாடகாவுக்கு ரேஷன் அரிசி மூட்டைகளை மர்மநபர்கள் கடத்த முயன்றதும், அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபடுவதை அறிந்ததும் வாகனங்களை அப்படியே விட்டு விட்டு் தப்பித்து சென்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ரேஷன் அரிசியுடன் சரக்கு வேன் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். தப்பித்து சென்ற நபர்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story