வாணியம்பாடி நகரமன்ற தேர்தலில் தோல்வியடைந்த ெபண் வேட்பாளர் ‘கேக்’ வெட்டி வீடு வீடாக வழங்கி நன்றி தெரிவித்தார்
வாணியம்பாடி நகரமன்ற தேர்தலில் தோல்வியடைந்த ெபண் வேட்பாளர் ‘கேக்’ வெட்டி வீடு வீடாக வழங்கி நன்றி தெரிவித்தார்.
வாணியம்பாடி
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நாடார் காலனியைச் சேர்ந்தவர் சீதாலட்சுமி. இவர் வாணியம்பாடி நகர மன்ற தேர்தலில் 29-வது வார்டில் சுயேச்சையாகப் போட்டியிட்டு இரவு பகல் பாராமல் தீவிர பிரசாரம் செய்தார். எனினும், 230 வாக்குகள் பெற்று டெபாசிட் இழந்தார்.
தோல்வியை கண்டு மனம் தளராமல் சீதாலட்சுமி தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ‘கேக்’ வெட்டி வினியோகம் செய்ய முடிவு செய்தார். அதன்படி ேகக் ஒன்றை வாங்கி வந்த அவர், அதில் தனக்கு வாக்களித்த ‘நேர்மையான வாக்காளர்களுக்கு நன்றி’ என எழுதியிருந்தார்.
அவர் போட்டியிட்ட வார்டில் மொத்தம் 1,724 வாக்குகள் பதிவாகியிருந்தன. அதில் தி.மு.க வேட்பாளர் சுபாஷினி செல்வம் 1,226 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அ.தி.மு.க வேட்பாளர் பிரியங்கா 268 வாக்குகள் பெற்று டெபாசிட் இழந்தார். மும்முனை போட்டியில் 3-ம் இடத்துக்குத் தள்ளப்பட்டிருந்தாலும் சீதாலட்சுமி தனக்கு ஓட்டுப்போட்ட வாக்காளர்களுக்கு வீடு, வீடாகச் சென்று கேக் வழங்கி நன்றி தெரிவித்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story