ஈரோடு மாவட்டத்தில் 25 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 2 ஆயிரத்து 66 பேருக்கு பரிசோதனை செய்ததில் 27 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. இந்த நிலையில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலின்படி புதிதாக மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 534 ஆக உயர்ந்தது.
மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 93 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 182 பேர் தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ள நிலையில் தற்போது தொற்று உள்ள 618 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Related Tags :
Next Story