தேவாங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்


தேவாங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 24 Feb 2022 10:14 PM IST (Updated: 24 Feb 2022 10:14 PM IST)
t-max-icont-min-icon

அய்யலூரில் சரணாலயம் அமைக்க தேவாங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

வடமதுரை:

திண்டுக்கல் மாவட்டத்தில் அய்யலூர், நத்தம் வனப்பகுதிகளிலும், கரூர் மாவட்டம் கடவூர் வனப்பகுதியிலும் அரிய வகை உயிரினமான சாம்பல் மற்றும் சிவப்பு நிற தேவாங்குகள் உள்ளன. அழிவின் விளிம்பில் உள்ள தேவாங்குகளை பாதுகாக்க, அய்யலூர் வனப்பகுதியில் சரணாலயம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. 

இந்தநிலையில் 3 மாத காலத்துக்குள் வனப்பகுதியில் உள்ள தேவாங்குகளை கணக்கெடுத்து, சரணாலயம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறைக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. 

இதன் எதிரொலியாக திண்டுக்கல், கரூர் மாவட்ட வனப்பகுதிகளில் தேவாங்குகள் கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியது. நாளை (சனிக்கிழமை) வரை இந்த பணி நடைபெறுகிறது. இதற்கான பயிற்சி முகாம், திண்டுக்கல் வனவியல் விரிவாக்க மையத்தில் நடந்தது. 

கோவை சலீம்அலி பறவைகள் மற்றும் இயற்கை வரலாற்று மையத்துடன் இணைந்து முதல் முறையாக தேவாங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. 

வனப்பகுதியை 104 பிரிவுகளாக பிரித்து, ஒவ்வொரு பிரிவுக்கும் 4 பேர் வீதம் நியமிக்கப்பட்டு இரவு நேரத்தில் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. இது தொடர்பாக இன்னும் 3 நாட்களில் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அய்யலூரில் தேவாங்கு சரணாலயம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். 

Next Story