சகாய மாதா மின்தேர் பவனி
திண்டுக்கல் புனித வளனார் பேராலயத்தில் சகாய மாதா மின் தேர் பவனி நடந்தது.
முருகபவனம்:
திண்டுக்கல் புனித வளனார் பேராலயத்தில் சகாய மாதா திருவிழா கடந்த 20-ந் தேதி தொடங்கியது. இதற்கு திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி தலைமை தாங்கி சிறப்பு திருப்பலியை நிறைவேற்றி, கொடியேற்றி வைத்தார். திண்டுக்கல் வட்டார அதிபர் சகாயராஜ் மற்றும் உதவி பங்குத்தந்தையர்கள் முன்னிலை வகித்தனர்.
இதைத்தொடர்ந்து நாள்தோறும் பங்குத்தந்தையர்கள் சிறப்பு திருப்பலி மற்றும் குணமளிக்கும் வழிபாடு ஆகியவற்றை நடத்தினர். இந்த திருவிழாவில் நேற்று முன்தினம் திருச்சி மறைமாவட்ட முதன்மை குரு அந்துவான் கலந்து கொண்டு மின் தேர் பவனியை தொடங்கி வைத்தார்.
இந்த பவனி, திண்டுக்கல் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பேராலயத்தை அடைந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story