வீடுகளில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 4 பேர் கைது


வீடுகளில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 4 பேர் கைது
x
தினத்தந்தி 24 Feb 2022 10:48 PM IST (Updated: 24 Feb 2022 10:48 PM IST)
t-max-icont-min-icon

ெவம்பக்கோட்டை அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

தாயில்பட்டி
ெவம்பக்கோட்டை அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சோதனை
வெம்பக்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் தடைசெய்யப்பட்ட சரவெடிகள், சீனி வெடிகள் தொடர்ந்து தயார் செய்து வருவதாக வந்த புகாரின் பேரில் வெம்பக்கோட்டை போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் அவ்வப்போது சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்க பணி நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதுவரை சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டதாக 18 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தயார் செய்து வைத்திருந்த சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான சரவெடிகள் பறிமுதல் செய்யப்பட்டன. 
இருப்பினும் சிலர் தொடர்ந்து சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக வெம்பக்கோட்டை போலீசாருக்கு புகார்கள் வந்ததன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றி முருகன் தலைமையில் விஜயரெங்காபுரம், மேலகோதை நாச்சியார்புரம், கீழகோதை நாச்சியார்புரம், விஜயகரிசல்குளம் உள்ளிட்ட பகுதிகளில் வெம்பக்கோட்டை போலீசார் வீடுகளில் அதிரடியாக சோதனை நடத்தினர். 
4 பேர் கைது
அப்போது கீழ கோதைநாச்சியார்புரத்தில் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சின்ன காளியப்பன்(வயது 37) என்பரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த 20 கிலோ சரவெடிகளை பறிமுதல் செய்தனர். மேலும் கொடியரசன் வீட்டில் இருந்து 240 பெட்டிகளில் சரவெடிகள், விஜயகரிசல்குளத்தில் கருப்பசாமி வீட்டில் இருந்து 10 கிலோ சரவெடிகள், குருசாமி வீட்டில் இருந்து 10 கிலோ சரவெடிகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இவர்களும் கைது செய்யப்பட்டனர்.

Next Story