மாணவர்களிடையே மோதலில் ஒரு மாணவருக்கு கத்திக்குத்து
திருப்பூர் இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவருக்கு கத்திக்குத்து விழுந்தது.
வீரபாண்டி
திருப்பூர் இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவருக்கு கத்திக்குத்து விழுந்தது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மாணவருக்கு கத்திக்குத்து
திருப்பூர் இடுவம்பாளையத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் அடிக்கடி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் பிளஸ்-2 மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு காரணமாக மாணவர்கள் இரு தரப்பினராக பிரிந்து பள்ளியில் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் ஒரு மாணவருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதனால் ரத்தம் வழிந்த நிலையில் அந்த மாணவரை பள்ளி ஆசிரியர்கள் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வாக்குவாதம்
இது பற்றிய தகவல் அறிந்ததும் காயம் அடைந்த மாணவரின் பெற்றோர் மற்றும் பலர் நேற்று பள்ளிக்கு வந்து பள்ளியை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது கத்தியால் குத்திய மாணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்ைக வைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் வீரபாண்டி போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்ேபாது மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பெற்றோர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story