அரசியல் கட்சியினர் உள்பட 8 பேர் டெபாசிட் இழந்தனர்


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 24 Feb 2022 10:59 PM IST (Updated: 24 Feb 2022 10:59 PM IST)
t-max-icont-min-icon

புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி தேர்தலில் அரசியல் கட்சியினர் உள்பட 8 பேர் டெபாசிட் இழந்தனர்.

நொய்யல்
தேர்தல்
கரூர் மாவட்டம், புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சிக்கு நடந்து முடிந்த வார்டு கவுன்சிலர் தேர்தலில் டெபாசிட்டை இழந்த வேட்பாளர்கள் குறித்த விவரம் வருமாறு:-
வார்டு-2: தி.மு.க. வேட்பாளர் சங்கர் 316 வாக்குகளும், அ.தி.மு.க. வேட்பாளர் சக்திவேல் 212 வாக்குகளும், சுயேச்சை வேட்பாளர் ஆறுமுகம் 9 வாக்குகளும் பெற்றனர். இதில் சுயேச்சை வேட்பாளர் ஆறுமுகம் டெபாசிட் இழந்தார்.
 வார்டு-3: தி.மு.க. வேட்பாளர் குரு 325 வாக்குகளும், அ.தி.மு.க. வேட்பாளர் வீரமணி 36 வாக்குகளும், சுயேச்சை வேட்பாளர் லட்சுமி 87 வாக்குகளும், பெற்றனர். 
இதில் அ.தி.மு.க. வேட்பாளர் வீரமணி, சுயேச்சை  வேட்பாளர் லட்சுமி ஆகியோர் டெபாசிட் இழந்தனர். 
வார்டு-4: தி.மு.க. வேட்பாளர் மீனாட்சி 363 வாக்குகளும், அ.தி.மு.க. வேட்பாளர் செல்வி 19 வாக்குகளும், சுயேச்சை வேட்பாளர் செல்வி 198 வாக்குகளும், பா.ம.க. வேட்பாளர் சிவசாமி 109 வாக்குகளும் பெற்றனர். இதில் அ.தி.மு.க. வேட்பாளர் செல்வி மற்றும் பா.ம.க. வேட்பாளர் சிவசாமி ஆகியோர் டெபாசிட் இழந்தனர்.
டெபாசிட் இழந்தனர் 
வார்டு-7: தி.மு.க. வேட்பாளர் ரூபா 278 வாக்குகளும், அ.தி.மு.க. வேட்பாளர் மூர்த்தி 46 வாக்குகளும், சுயேச்சை வேட்பாளர் செந்தில்குமார் 72 வாக்குகளும் பெற்றனர். இதில் அ.தி.மு.க. வேட்பாளர் மூர்த்தி டெபாசிட் இழந்தார்.
வார்டு-8: தி.மு.க. வேட்பாளர் தனலட்சுமி 334 வாக்குகளும், அ.தி.மு.க. வேட்பாளர் ஜோதிமணி 65 வாக்குகளும் பெற்றனர். இதில் அ.தி.மு.க. வேட்பாளர் ஜோதிமணி டெபாசிட் இழந்தார். 
வார்டு11: தி.மு.க. வேட்பாளர் மல்லிகா 257 வாக்குகளும், அ.தி.மு.க. வேட்பாளர் சுலக்சனா 148 வாக்குகளும், சுயேச்சை வேட்பாளர் நிர்மலா 21 வாக்குகளும் பெற்றனர். இதில் சுயேச்சை வேட்பாளர் நிர்மலா டெபாசிட் இழந்தார். புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த 4 பேரும், சுயேச்சை வேட்பாளர்கள் 3 பேரும், பா.ம.க.வை சேர்ந்த ஒருவரும் டெபாசிட் இழந்தனர். மற்ற அனைத்து வார்டுகளிலும் போட்டியிட்ட தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க., சுயேச்சைகள் டெபாசிட் பெற்றனர்.

Next Story