தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 24 Feb 2022 11:09 PM IST (Updated: 24 Feb 2022 11:09 PM IST)
t-max-icont-min-icon

பொதுமக்கள் குறைகள் அடங்கிய தினத்தந்தி புகார் பெட்டி

 மாடுகளால் போக்குவரத்திற்கு இடையூறு

வேலூர் காகிதப்பட்டறை பகுதியில் உள்ள சாலையில் மாடுகள் சுற்றித்திரிவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. ஒரு சில நேரத்தில் விபத்துகளும் நடக்கிறது. எனவே வேலூரில் போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் மாடுகளை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  -மாயகண்ணன், வேலூர்.

சுகாதார வளாகம் தேவை

  ராணிப்ேபட்டை முத்துக்கடை பஸ் நிலையத்துக்கு தினமும் ஏராளமான பஸ்கள் வந்து செல்கின்றன. அங்கிருந்து ஆயிரக்கணக்கான பயணிகள் பஸ்களில் பயணம் செய்கிறார்கள். பஸ் ஏற வரும் பயணிகள், அங்கு பஸ்சுக்காக காத்திருப்போர், பஸ்களில் இருந்து இறங்கி செல்வோருக்கு இயற்கை உபாதைகள் ஏற்பட்டால், அதைக் கழிப்பதற்கு அங்கு சுகாதார வளாகம் இல்லை. குழந்ைதகள், முதியோர், ெபண்கள் அவதிப்படுகிறார்கள். பயணிகளின் நலன் கருதி முத்துக்கடை பகுதியில் பொதுச்சுகாதார வளாகம் அமைத்துத் தர ேவண்டும்.
  -குமார், ராணிப்பேட்டை.

 வீணாகும் குடிநீர்

  வேலூர் மத்திய சிறையில் இருந்து சிறை காவலர் பயிற்சி பள்ளிக்கு செல்லும் வழியில் கடந்த ஆண்டு குழாய் உடைப்பு ஏற்பட்டது. இதனால் நாள் முழுவதும் குடிநீர் தொடர்ந்து வீணாகி கொண்டே இருக்கிறது. குழாய் உடைப்பை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
  -ராஜ்மோகன், தொரப்பாடி.

வட்ட வழங்கல் அதிகாரி நடவடிக்கை எடுப்பாரா?

  குடியாத்தம் போஸ்பேட்டையில் 8-ம் நம்பர் ரேஷன்கடையில் பயோ மெட்ரிக் முறையில் பொருட்கள் வழங்கப்படுகிறது. அதற்கான சலுைகயாக முதிேயார், மாற்றுத்திறனாளிகள், பல்ேவறு வகையான பொருட்கள் ெபற இயலாதோர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அவரவருக்கு பதிலாக மாற்றுப்பயனாளி பொருட்களை ெபற்றுக்கொள்ளலாம் எனக் கூறி விண்ணப்பம் பெறப்பட்டு 7 மாதங்கள் ஆகிறது. கையெழுத்துப் பெற விண்ணப்பங்களை வட்ட வழங்கல் அதிகாரியிடம் கொண்டு சென்று சேர்க்காமல் நிலுவையில் வைத்துள்ளனர். இதனால் ரேஷன் பொருட்கள் கிடைக்க பெறாமல் பலர் அவதிப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
  -லட்சுமிநரசிம்மன், குடியாத்தம்.

கழிவுகளால் நிரம்பிய கால்வாய்

  வேலூர் பெண்கள் தனிச்சிறைக்கும், சிறை காவலர் பயிற்சி பள்ளிக்கும் இடைப்பட்ட பகுதியில் கால்வாய் ஒன்று செல்கிறது. இந்தக் கால்வாயில் சுற்றுப்புறங்களில் உள்ளவர்களும், சில கடைக்காரர்களும் குப்பைகளை மூட்டைகளாகக் கட்டி கொண்டுவந்து வீசிவிட்டு ெசல்கிறார்கள். அந்தக் கழிவுகளால் கால்வாய் நிரம்பியதுடன், துர்நாற்றம் வீசுகிறது. குப்பைக்கழிவுகளை அப்புறப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
  -மோகனசுந்தரம், வேலூர்.

சேதமான மின்கம்பம்

  ஜோலார்பேட்டை ஒன்றியம் பாச்சல் ஊராட்சி ஆயுதப்படை மைதானத்துக்கு அருகில் மின்கம்பம் ஒன்று சேதமாகி உள்ளது. அந்த மின்கம்பம் எந்த நேரத்திலும் கீழே விழும் அபாயம் உள்ளது. இதுபற்றி மின்வாரியத்துறைக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த மின்கம்பம் எப்போது உடைந்து விழும் என்றே தெரியவில்லை. சேதமான மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய கம்பம் நட வேண்டும்.
  -துைரராஜ், பாச்சல்.

கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

  திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் குரும்பேரி கிராமத்தில் இருந்து சிம்மணாபுதூர் வரை 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு கந்திலி ஒன்றிய நிர்வாகம் சார்பில் சாலை அமைக்கும் பணி கடந்த ஒரு ஆண்டாக ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதனால் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலையில் ஜல்லிக்கற்கள் கொட்டி கிடப்பில் போட்டு விட்டனர். இதனால் சாலையில் நடந்து செல்லவோ, வாகனங்களில் செல்லவோ சிரமமாக உள்ளது. சாலை அமைக்கும் பணியை விரைவில் தொடங்கி முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
  -சுரேஷ்முத்துக்குமார், கந்திலி.

போக்குவரத்து சிக்னல் வைக்கப்படுமா?

  திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் சந்திப்பு பகுதியில் 4 ரோடு சந்திப்பு பகுதியாக உள்ளது. இந்தப் பகுதியில் காலை முதல் இரவு சுமார் 8 மணி வரை போக்குவரத்து அதிகமாக காணப்படுகிறது. சாலையை கடக்க வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் நிறுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. ஆனால் நாளடைவில் சரிவர கண்காணிப்பதில்லை. எனவே அந்தப் பகுதியில் போக்குவரத்து சிக்னல் அமைத்தால் வாகன ஓட்டிகள் எந்தவித சிரமமின்றி சாலையை கடக்க இயலும். இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  -ராஜ், திருவண்ணாமலை.
  

Next Story