உக்ரைனில் இருந்து முத்தூர் வந்த மருத்துவ மாணவர்


உக்ரைனில் இருந்து முத்தூர் வந்த மருத்துவ மாணவர்
x
தினத்தந்தி 24 Feb 2022 11:27 PM IST (Updated: 24 Feb 2022 11:27 PM IST)
t-max-icont-min-icon

ரஷியா-உக்ரைன் நாடுகளுக்கிடையே போர் தொடங்கிய நிலையில் உக்ரைனில் படிக்கும் முத்தூரைச் சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் சொந்த ஊர் திரும்பினார்.

முத்தூர்
ரஷியா-உக்ரைன் நாடுகளுக்கிடையே போர் தொடங்கிய நிலையில் உக்ரைனில் படிக்கும் முத்தூரைச் சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் சொந்த ஊர் திரும்பினார்.
 மாணவர்
திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே உள்ள ஆலாம்பாளையத்தை சேர்ந்தவர் கதிர்வேல். இவரது மனைவி லட்சுமி. முத்தூர் கடை வீதியில் மளிகை கடை நடத்தி வருகின்றனர். இவர்களின் மகன் கே.லோகவர்ஷன் (வயது 20) உக்ரைன் நாட்டில் மருத்துவம் படித்து வருகிறார். 
இந்த நிலையில் ரஷ்யா- உக்ரைன் இடையே போர் மூளும் சூழல் ஏற்பட்டதை தொடர்ந்து இந்திய அரசு அவசர ஆலோசனை மேற்கொண்டு உக்ரைன் நாட்டில் தங்கி இருந்த இந்திய மாணவர்கள் உடனே தாய்நாடு திரும்ப வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தது. அதைத் தொடந்து விமானம் மூலம் மாணவர்களை பத்திரமாக மீட்கும் முயற்சியில்இந்திய தூதரக அதிகாரிகள் ஈடுபட்டனர்.
தாய் நாடு திரும்பினார்
இந்த நிலையில் உக்ரைனில் இருந்து நேற்று முன் தினம் அதிகாலை கடைசியாக புறப்பட்ட இந்திய பாதுகாப்பு விமானத்தின் மூலம் முத்தூரை சேர்ந்த மாணவர் கே.லோகவர்ஷன் இந்தியா புறப்பட்டார்.  இந்த விமானம் நேற்று முன் தினம் காலை 11 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தடைந்தது. அதன் பின்னர் ரெயில் மூலம் நேற்று காலை 6 மணிக்கு அவர் ஈரோடு வந்து சேர்ந்தார். பின்னர் அங்கிருந்து பஸ் மூலம் காலை 7.30 மணிக்கு ஆலாம்பாளையம்  வந்து சேர்ந்தார்.
‌ இந்த நிலையில் உக்ரைனில் போர் தொடங்கும் முன்பே மாணவர் லோகவர்ஷன் பத்திரமாக வந்து சேர்ந்ததால் அவரை குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், நகர, சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் வரவேற்றனர்.

Next Story