ஜெயலலிதா பிறந்த நாள் விழா
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தலைமையில் நடந்தது.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தலைமையில் நடந்தது.
ஜெயலலிதா பிறந்த நாள் விழா
மயிலாடுதுறை அருகே மணல்மேட்டில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா அ.தி.மு.க. சார்பில் நடந்தது. விழாவிற்கு வடக்கு ஒன்றிய செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் ராமமூர்த்தி, முன்னாள் பேரூராட்சி மன்ற துணை தலைவர் மதன்சிவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் ஜெயலலிதாவின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் சங்கீதா ரமேஷ், செல்வி, லதா, பாண்டியன், ஒன்றிய துணைச் செயலாளர் சேத்தூர்குமார், ஒன்றிய இணைச் செயலாளர் வாசுகி சோமு, ஒன்றிய வர்த்தகர் பிரிவு செயலாளர் மகாலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல மயிலாடுதுறை பஸ் நிலையம் அருகில் அ.தி.மு.க. நகர செயலாளர் செந்தமிழன் தலைமையில் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பவுன்ராஜ் கலந்து கொண்டு அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் முன்னாள் நகர செயலாளர்கள் அலி, கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை அருகே மாப்படுகையில் அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் சந்தோஷ்குமார் தலைமையில் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் பவுன்ராஜ் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
பொறையாறு
ஜெயலலிதாவின் 74-வது பிறந்த நாள் விழா, செம்பனார்கோவில் ஒன்றிய பகுதியான எடுத்துக்கட்டி, சங்கரன்பந்தல், செம்பனார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று நடந்தது. விழாவிற்கு மயிலாடுதுறை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பவுன்ராஜ் தலைமை தாங்கினார். தொடர்ந்து அவர் பல்வேறு இடங்களில் கட்சி கொடியை ஏற்றி வைத்து ஜெயலலிதா உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சீர்காழி
சீர்காழி புதிய பஸ்நிலையம் எதிரில் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத்தலைவர் பாரதி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் சந்திரசேகரன், ரவிச்சந்திரன், நற்குணன், சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சீர்காழி நகர கழக செயலாளர் வினோத் வரவேற்று பேசினார். விழாவில் மாவட்ட செயலாளர் எஸ்.பவுன்ராஜ் கலந்துகொண்டு ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து 300 ஏழை எளிய பெண்களுக்கு சேலைகள் வழங்கினார். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட மகளிரணி செயலாளர் சக்தி, மாவட்ட துணை செயலாளர் செல்லையன், பொதுக்குழு உறுப்பினர் ஆனந்த நடராஜன், மாவட்ட நிர்வாகி ராஜமாணிக்கம், நகர பேரவை செயலாளர் மணி, நகர்மன்ற உறுப்பினர்கள் ரமாமணி, கிருஷ்ணமூர்த்தி, நாகரத்தினம், ஊராட்சி மன்ற தலைவர்கள், கூட்டுறவு சங்க தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருவெண்காடு
பூம்புகார் தர்மகுளம் கடைத்தெருவில் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பால் கூட்டுறவு சங்க தலைவரும் மாவட்ட கூட்டுறவு இயக்குனருமான பூம்புகார் பாலு கலந்து கொண்டு ஜெயலலிதா உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் சீர்காழி கிழக்கு ஒன்றிய ஜெ.பேரவை இணைச் செயலாளர் குட்டி பாலு உள்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
நலத்தி்ட்ட உதவிகள்
சீர்காழி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் சட்டநாதபுரத்தில் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் செல்லத்துரை, முன்னாள் ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம், அவைத் தலைவர் மனோகரன், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் வக்கீல் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய மாணவரணி செயலாளர் மாறன் வரவேற்றார். இதில் மாவட்ட அவைத் தலைவர் பாரதி, மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினர். இதில் மாவட்ட மகளிரணி செயலாளர் சக்தி, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சங்கர், ஊராட்சி மன்ற தலைவர்கள் மதியழகன், தட்சிணாமூர்த்தி, அகோரமூர்த்தி, சரளா, ஒன்றிய இளைஞரணி செயலாளர் சந்திரசேகரன் உள்ளிட்ட திரளான கட்சியினர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட மீனவர் அணி துணைத் தலைவர் முத்து நன்றி கூறினார்.
கொள்ளிடம்
கொள்ளிடம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் கொள்ளிடம் கடைவீதியில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா, மாவட்ட அவைத் தலைவர் பாரதி தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் கலந்து கொண்டு ஜெயலலிதா உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதேபோல மயிலாடுதுறையில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட அவைத்தலைவர் பி.என்.ரத்தினகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுதாகரன், ஜெயலலிதா உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
குத்தாலம்
இதேபோல குத்தாலம் கடைவீதியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் மயிலாடுதுறை அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் கலந்துகொண்டு கடைவீதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
Related Tags :
Next Story