அந்தியூரில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: கூலித்தொழிலாளிக்கு 5 ஆண்டு ஜெயில்
அந்தியூரில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித்தொழிலாளிக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
அந்தியூரில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித்தொழிலாளிக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
சிறுமிக்கு பாலியல் தொல்லை
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவுட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 58). கூலித்தொழிலாளி. இவர் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமியின் தாயார் பவானி அனைத்து மகளிர் போலீசில் கடந்த 21-7-2021 அன்று புகார் தெரிவித்தார்.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். புகாரின் உண்மை தன்மையை தொடர்ந்து தேவராஜை போலீசார் கைது செய்தனர்.
5 ஆண்டு ஜெயில்
மேலும் இதுகுறித்து ஈரோடு மாவட்ட மகளிர் கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை நீதிபதி ஆர்.மாலதி விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார். அதில் குற்றம்சாட்டப்பட்ட தேவராஜூக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.
அபராதம் செலுத்த தவறினால் கூடுதலாக 2 மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு மாத காலத்துக்குள் தமிழ்நாடு அரசு ரூ.50 ஆயிரம் நிதி வழங்க வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் நீதிபதி ஆர்.மாலதி கூறி உள்ளார்.
Related Tags :
Next Story