தந்தையை கொலை செய்த மகன் கைது


தந்தையை கொலை செய்த மகன் கைது
x
தினத்தந்தி 24 Feb 2022 11:57 PM IST (Updated: 24 Feb 2022 11:57 PM IST)
t-max-icont-min-icon

தந்தையை கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டார்.

சிங்கம்புணரி, 
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அரசினம் பட்டியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது59).  வெளிநாட்டில் வேலை செய்து விட்டு சொந்த ஊருக்குத் திரும்பிய செல்வம் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து வருகிறார். செல்வத்தின் மகன் முகுந்தன் (23) டிப்ளமோ படித்துவிட்டு கட்டிட உதவி பணியாளராக வேலை செய்து வருகிறார். இவர் அடிக்கடி மதுகுடித்துவிட்டு வந்து தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு  வீட்டின் மாடியில் மது அருந்திவிட்டு கீழே வந்து தனது தந்தை செல்வத்திடம் மது வாங்க பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது பணம் தர மறுத்த தந்தை செல்வத்தை தனது டீசர்ட்டால் கழுத்தை நெரித்து கொலைசெய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த சிங்கம்புணரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று செல்வத்தின் உடலை கைப்பற்றி  சிங்கம்புணரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முகுந்தனை சிங்கம்புணரி போலீசார் கைது செய்தனர்.

Next Story