உக்ரைன் நாட்டில் குமரியை சேர்ந்த 21 மருத்துவ மாணவர்கள் தவிப்பு பெற்றோர்- உறவினர்கள் கவலை


உக்ரைன் நாட்டில் குமரியை சேர்ந்த 21 மருத்துவ மாணவர்கள் தவிப்பு பெற்றோர்- உறவினர்கள் கவலை
x
தினத்தந்தி 25 Feb 2022 12:05 AM IST (Updated: 25 Feb 2022 12:05 AM IST)
t-max-icont-min-icon

உக்ரைனில் போர் நடந்து வருவதால், அங்கிருந்து வெளியேற முடியாமல் குமரி மாணவர்கள் 21 பேர் சிக்கி தவித்து வருகிறார்கள். இதனால் மாணவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கவலையடைந்துள்ளனர்.

நாகா்கோவில், 
உக்ரைனில் போர் நடந்து வருவதால், அங்கிருந்து வெளியேற முடியாமல் குமரி மாணவர்கள் 21 பேர் சிக்கி தவித்து வருகிறார்கள். இதனால் மாணவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கவலையடைந்துள்ளனர்.
உக்ரைனில் போர் 
உக்ரைன் எல்லையில் கடந்த சில நாட்களாக ரஷியா தனது படைகளை குவித்து வந்தது. இதனால், எப்போது வேண்டுமானாலும் போர் நடக்கலாம் என்ற அபாய சூழல் உருவானது. 
போா் பதற்றத்தால் உக்ரைனில் இருந்து சிலர் விமானங்கள் மூலம் தமிழகத்தை வந்தடைந்தனர். இந்த நிலையில் நேற்று காலையில் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்தது. அந்தநாட்டின் முக்கிய நகரங்களில் ரஷ்யா வான் வழித்தாக்குதல் நடத்தியது. 
மாணவர்களை மீட்க முயற்சி
தமிழகத்தை சேர்ந்த சுமார் 5 ஆயிரம் மாணவர்கள் மருத்துவம், என்ஜினீயரிங் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளை உக்ரைனில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் சேர்ந்து படித்து வருகிறார்கள். அங்கு படிக்கும் இந்திய மாணவர்களை மீட்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக டெல்லியில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று இந்திய மாணவர்களை மீட்க உக்ரைனுக்கு புறப்பட்டது.  
ஆனால் அங்கு வான்வழி தாக்குதல் நடந்ததால் உக்ரைனுக்குள் நுழைய முடியாமல் விமானம் மீண்டும் இந்தியா திரும்பியது. இதனால் மாணவா்கள் மற்றும் பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளனர். 
குமரி மாணவர்கள் தவிப்பு
உக்ரைன் நாட்டில், குமரி மாவட்டத்தை சேர்ந்த 21 மருத்துவ மாணவர்கள் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. அவர்களில் நாகர்கோவில் வடசேரி ஆராட்டு ரோட்டை சேர்ந்த மருத்துவ மாணவரும் ஒருவர்.   
பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசி அங்குள்ள நிலவரங்களை கேட்டு வருகிறார்கள்.
மேலும் பெற்றோர்கள் மத்திய அரசின் வெளிநாட்டு தூதரகத்தை தொடர்பு கொண்டு தங்களது பிள்ளைகளை பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் விடுத்து வருகிறார்கள்.

Next Story