வடக்கு மண்டல ஐ.ஜி. ஆய்வு


வடக்கு மண்டல ஐ.ஜி. ஆய்வு
x
தினத்தந்தி 25 Feb 2022 12:36 AM IST (Updated: 25 Feb 2022 12:36 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வடக்கு மண்டல ஐ.ஜி. ஆய்வு மேற்கொண்டார்.

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வடக்கு மண்டல ஐ.ஜி. சந்தோஷ்குமார் வந்தார். பின்னர் அவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் மற்றும் கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து மாவட்ட அலுவலகத்தில் இயங்கும் சிறப்பு பிரிவு அலுவலகங்களை பார்வையிட்டு போலீசாருக்கு உரிய அறிவுரைகளை வழங்கினார். ஆய்வின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர்லால், மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

Next Story