புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது


புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது
x
தினத்தந்தி 25 Feb 2022 12:54 AM IST (Updated: 25 Feb 2022 12:54 AM IST)
t-max-icont-min-icon

புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

சிவகாசி
சிவகாசி நகர பகுதியில் கடந்த காலங்களில் அதிக அளவில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பாபுபிரசாந்த் பொறுப்பு ஏற்ற பின்னர் புகையிலை விற்பனையை கட்டுப்படுத்தினார். புகையிலை விற்பனையில் ஈடு பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தார். இதனால் சிவகாசி பகுதியில் புகையிலை விற்பனை முற்றிலுமாக தடுக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சிவகாசி பகுதியில் மீண்டும் புகையிலை விற்பனை நடப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து டவுன் சப்-இன்ஸ்பெக்டர் சிராஜுதீன், செண்பகவேலன் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் பல இடங்களில் தீவிர விசாரணை நடத்தினர். இதில் சிவகாசி பகுதிக்கு வெளியூர்களில் இருந்து சிலர் புகையிலை பொருட் களை மொத்தமாக கடத்தி கொண்டு வந்து இருப்பு வைத்து விற்பனை செய்த ஷாஜகான் (வயது 63), மகேஷ்கணேசன் (42), முருகன் (47), மரியபிச்சை (56) ஆகியோரை கைது செய்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Next Story