மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் புதிதாக தேர் செய்யும் பணிகள் தீவிரம்


மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் புதிதாக தேர் செய்யும் பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 25 Feb 2022 1:21 AM IST (Updated: 25 Feb 2022 1:21 AM IST)
t-max-icont-min-icon

மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாசிப்பெருவிழாவுக்காக புதிதாக தேர் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேல்மலையனூர், 

மேல்மலையனூரில் உள்ள பிரசித்திபெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மகாசிவராத்திரியில் இருந்து 13 நாட்கள் மாசிப்பெருவிழா நடைபெறுவது வழக்கம். இதில் 7-ம் நாள் விழாவில் சிகர நிகழ்ச்சியாக தேரோட்டம்  நடைபெறும்.இதற்காக ஒவ்வொரு ஆண்டும் புதிதாக தேர் செய்து தேரோட்டம் நடத்துவது இந்த கோவிலின் சிறப்பு அம்சமாகும்.  அதன்படி மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் இந்தாண்டுக்கான மாசிப்பெருவிழா வருகிற 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 7-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேரோட்டத்திற்காக புதிதாக தேர் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஆய்வு

 இந்த பணியை  இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கஜேந்திரன், உதவி ஆணையர் ராமு ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது ஒப்பந்ததாரரிடம் பணிகள் தரமாகவும், குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்குமாறும் உத்தரவிட்டனர். இந்த ஆய்வின்போது அறங்காவலர் குழு தலைவர் வடிவேல் பூசாரி, அறங்காவலர்கள் செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, சந்தானம் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் உடனிருந்தனர்.

Next Story