மூதாட்டியிடம் 4½ பவுன் சங்கிலி பறிப்பு


மூதாட்டியிடம் 4½ பவுன் சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 25 Feb 2022 1:34 AM IST (Updated: 25 Feb 2022 1:34 AM IST)
t-max-icont-min-icon

மூதாட்டியிடம் 4½ பவுன் சங்கிலி பறிப்பு

பாபநாசம்:-

பாபநாசம் வங்காரம் பேட்டை கீழ செங்குந்தர் தெருவில் வசித்து வருபவர்‌ சுசீலா (வயது 68). சம்பவத்தன்று இவர் வங்காரம்பேட்டை பஸ் நிறுத்தம் பகுதிக்கு சென்றபோது அங்கிருந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவருடைய கழுத்தில் கிடந்த 4½ பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். இதுகுறித்து அவர் பாபநாசம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளமாறன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க சங்கிலியை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story