மங்களூருவில் இருந்து தர்மபுரிக்குசரக்கு ரெயிலில் 1,325 டன் உரம் வந்தது


மங்களூருவில் இருந்து தர்மபுரிக்குசரக்கு ரெயிலில் 1,325 டன் உரம் வந்தது
x
தினத்தந்தி 25 Feb 2022 2:11 AM IST (Updated: 25 Feb 2022 2:11 AM IST)
t-max-icont-min-icon

மங்களூருவில் இருந்து சரக்கு ரெயிலில் தர்மபுரி வந்த 1,325 டன் யூரியா லாரிகள் மூலம் பல்வேறு மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டது.

தர்மபுரி, பிப்.25-
மங்களூருவில் இருந்து சரக்கு ரெயிலில் தர்மபுரி வந்த 1,325 டன் யூரியா லாரிகள் மூலம் பல்வேறு மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டது.
உரம் வந்தது
கர்நாடகா மாநிலம்மங்களூருவில் இருந்து 1,325 டன் யூரியா உரம் சரக்கு ரெயில் மூலம் தர்மபுரி ரெயில் நிலையத்திற்கு வந்தது. இந்த உர மூட்டைகளை சரக்கு ரெயிலில் இருந்து இறக்கி லாரிகள் மூலம் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள உரக்கடைகளுக்கு அனுப்பும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இந்தப் பணியை வேளாண்மை தரக்கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் தாம்சன், நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது விற்பனை அலுவலர்கள் பார்த்திபன், பரணி ஆகியோர் உடன் இருந்தனர்.
பயனடையலாம்
இதுகுறித்து வேளாண் இணை இயக்குனர் வசந்த ரேகாகூறியதாவது:-
தர்மபுரி மாவட்டத்திற்கு வந்த யூரியா உரத்தில் தர்மபுரி மாவட்ட உரக்கடைகளுக்கு 400 டன் அனுப்பப்படுகிறது. மாவட்ட வாரியாக கிருஷ்ணகிரிக்கு 570 டன், சேலத்துக்கு 105 டன், கள்ளக்குறிச்சிக்கு 50 டன், திருவண்ணாமலைக்கு 100 டன், கடலூருக்கு 55 டன், திருப்பத்தூருக்கு 45 டன் என பிரித்து லாரிகள் மூலமாக அனுப்பப்படுகிறது.
இவை அந்தந்த மாவட்டங்களில் உள்ள உர கடைகளுக்கு வினியோகிக்கப்படும். விவசாயிகள் ஆதார் எண்ணை பயன்படுத்தி அரசு நிர்ணயித்த விலையில் யூரியா உரத்தை பெற்று பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story