திருட்டு போன ரூ.5 லட்சம் செல்போன்கள் மீட்பு


திருட்டு போன ரூ.5 லட்சம் செல்போன்கள் மீட்பு
x
தினத்தந்தி 25 Feb 2022 2:11 AM IST (Updated: 25 Feb 2022 2:11 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திருட்டு போன ரூ.5 லட்சம் செல்போன்கள் மீட்கப்பட்டன. இந்த செல்போன்களை உரியவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி திரும்ப கொடுத்தார்.

கிருஷ்ணகிரி:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திருட்டு போன ரூ.5 லட்சம் செல்போன்கள் மீட்கப்பட்டன. இந்த செல்போன்களை உரியவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி திரும்ப கொடுத்தார்.
மீட்பு 
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காணாமல் போன மற்றும் திருடப்பட்ட செல்போன்களை கண்டுபிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி உத்தரவிட்டார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் மேற்பார்வையில் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் துரிதமாக நடவடிக்கை எடுத்தனர்.
இதில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள 46 செல்போன்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வெளி மாநிலங்களில் இருந்தும் மீட்கப்பட்டன.
உரியவர்களிடம் ஒப்படைப்பு
அப்படி மீட்கப்பட்ட செல்போன்களை, உரியவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி திரும்ப ஒப்படைத்தார். அப்போது அவர் பேசியதாவது;- செல்போன்கள் தொலைந்தாலோ, யாராவது பறித்து சென்றாலோ உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையம் அல்லது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இயங்கி வரும் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்ய வேண்டும்.
மேலும் ரசீது இல்லாமல் குறைந்த விலையில் அடையாளம் தெரியாத நபர்கள் விற்பனை செய்யக்கூடிய செல்போன்களை வாங்க கூடாது. ஏனென்றால் அவை பெரும்பாலும் திருட்டு செல்போன்களாகவோ, குற்ற வழக்குகளில் தொடர்புடைய செல்போன்களாகவோ இருக்கலாம். அத்தகைய செல்போன்களை வாங்குவதும், விற்பனை செய்வதும் சட்டப்படி குற்றமாகும். இணைய பண மோசடி குற்றங்கள் குறித்து உடனடியாக புகார் தெரிவிக்க 1930 என்ற எண்ணிற்கோ அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியிலோ புகார் அளிக்கலாம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story