முதன்மை கல்வி அலுவலகத்தை ஆசிரியர் பயிற்றுனர்கள் முற்றுகை
சேலம் முதன்மை கல்வி அலுவலகத்தை ஆசிரியர் பயிற்றுனர்கள் முற்றுகையிட்டனர்.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை கட்டுப்பாட்டில் 21 வட்டார வள மையங்கள் உள்ளன. இந்த மையங்களில் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்றுனர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் நேற்று இரவு கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து அங்குள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகனை சந்தித்து ஒரு கோரிக்கை மனுவை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
வட்டார வள மையத்தின் கீழ் பணிபுரிந்து வரும் நாங்கள், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பது, அரசு திட்டங்களை செயல்படுத்துவது, பள்ளிக்கு தேவையான உபகரணங்களை அனுப்புவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகிறோம். ஆனால் தற்போது அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கீழ் பணிபுரிய வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நேரம் அதிகரிப்பதோடு பணிகளையும் கூடுதலாக கவனிக்க வேண்டியுள்ளது. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளாகி வருகிறோம். அதோடு, பள்ளிக்கு பார்வையிட செல்லும்போது, 10 நிமிடங்கள் தாமதமாக சென்றால் எவ்வித விளக்கமும் கேட்காமல் மெமோ அளித்து ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதை கைவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story