துபாயில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.75 லட்சம் தங்கம் மீட்பு


துபாயில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.75 லட்சம் தங்கம் மீட்பு
x
தினத்தந்தி 25 Feb 2022 2:38 AM IST (Updated: 25 Feb 2022 2:38 AM IST)
t-max-icont-min-icon

துபாயில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.75 லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு:

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த விமான பயணிகளிடம் சுங்கவரித்துறையினர் சோதனை நடத்தினர். அதில், ஒரு பயணியின் நடவடிக்கைகள் அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. அவர் வைத்திருந்த உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது கால் வலிக்காக பயன்படுத்தும் பெல்ட்டில் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

  அதாவது தங்கத்தை உருக்கி, அதனை பேஸ்ட் போல மாற்றி பெல்ட்டில் மறைத்து வைத்து துபாயில் இருந்து பெங்களூருவுக்கு கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அந்த நபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 1 கிலோ 400 கிராம் தங்கம் மீட்கப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.75 லட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story