கொரோனா தடுப்பூசி முகாம்
வாடிப்பட்டி அருகே கச்சைகட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக ஈஷா பாராமெடிக்கல் அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கு தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது.
வாடிப்பட்டி,
வாடிப்பட்டி அருகே கச்சைகட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக ஈஷா பாராமெடிக்கல் அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கு தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. முகாமிற்கு அன்னை கல்வி குழும தலைவர் அன்வர் கபீர் தலைமை தாங்கினார். முதல்வர் ஷாம்சேட் முன்னிலை வகித்தார். பேராசிரியர் பாண்டி வரவேற்றார். முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார் தலைமையில் டாக்டர் விக்னேஷ் குமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முனியசாமி, சுகாதார ஆய்வாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தினர்.
Related Tags :
Next Story