திருமணம் ஆகாத ஏக்கத்தில் எலக்ட்ரீசியன் தற்கொலை
திருமணம் ஆகாத ஏக்கத்தில் எலக்ட்ரீசியன் தற்கொலை
செய்யாறு
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா செய்யாறு அருகே சித்தனகால் கிராமத்தைச் சேர்ந்த பூபதியின் மகன் மணிகண்டன் (வயது 25), எலக்ட்ரீசியன்.
இவருக்கு மதுக்குடிக்கும் பழக்கம் இருந்தது. தனக்கு திருமணம் ஆகாத ஏக்கத்தில் இருந்து வந்த அவர் பெற்றோரிடம் திருமணம் செய்து வைக்கும்படி பலமுறை வற்புறுத்தி உள்ளார். குடிப்பழக்கத்தை விட்டால் திருமணம் செய்து வைப்பதாக பெற்றோர் கூறியதாக தெரிகிறது.
இந்தநிலையில் சம்பவத்தன்று குடிபோதையில் இருந்த மணிகண்டன் பெற்றோரிடம் தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி ேகட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
அவரை, பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த மணிகண்டன் விஷத்தை குடித்து விட்டு மயக்கமடைந்து கிடந்தார்.
அவரை, பெற்றோர் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து பூபதி கொடுத்த புகாரின் பேரில் பிரம்மதேசம் ேபாலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story