அறிவியல் பூங்கா சுத்தம் செய்யும் பணி
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் எதிேர அறிவியல் பூங்கா சுத்தம் செய்யும் பணி
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அணைகள், சுற்றுலா தலங்கள் மற்றும் பொழுதுப்போக்கு பூங்காக்கள் அனைத்தும் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக மூடப்பட்டு இருந்தது.
தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால் நாளை (சனிக்கிழமை) முதல் இவை கொரோனோ வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி செயல்படும் என மாவட்ட கலெக்டர் பா.முருகேஷ் அறிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே வேங்கிக்கால் ஏரிக்கரையில் ரூ.3.5 கோடி மதிப்பீட்டில் அறிவியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு பள்ளி மாணவர்கள் அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்து அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு உபகரணங்களும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பொழுதை கழிக்கும் வகையில் விளையாட்டு உபகரணங்களும், உடற்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு தேவையான உபகரணங்களும் அமைக்கப்பட்டுள்ளது.
சுமார் பல மாதங்களாக இந்த பூங்கா பொதுமக்கள் பயன்பாடு இன்றி மூடி கிடப்பதால் புல் செடிகள் வளர்ந்து அசுத்தமாக காணப்பட்டது. நாளை முதல் இந்த பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளதால் சுத்தம் செய்யும் பணி இன்று தீவிரமாக நடைபெற்றது.
அதுபோல் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முக்கிய பூங்காக்கள் மற்றும் அணைகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக சுத்தம் செய்யும் பணி இன்று நடைபெற்றது.
Related Tags :
Next Story