5 டன் ரேஷன் அரிசி லாரியுடன் பறிமுதல்


5 டன் ரேஷன் அரிசி லாரியுடன் பறிமுதல்
x
தினத்தந்தி 25 Feb 2022 6:33 PM IST (Updated: 25 Feb 2022 6:33 PM IST)
t-max-icont-min-icon

ஆற்காட்டில் 5 டன் ரேஷன் அரிசி லாரியுடன் பறிமுதல்

ஆற்காடு

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி, சப்- இன்ஸ்பெக்டர் மகாராஜன் ஆகியோர் தலைமையில் நேற்று இரவு ஆற்காடு மாசா பேட்டை பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் 5 டன் ரேஷன் அரிசியை வெளியூருக்கு கடத்திச் செல்வது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து லாரியுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் ஆனந்தன் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஆற்காட்டை சேர்ந்த பழனி என்பவர் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். 

Next Story