மாணவர்களுடன் கலெக்டர் கலந்துரையாடல்


மாணவர்களுடன் கலெக்டர் கலந்துரையாடல்
x
தினத்தந்தி 25 Feb 2022 6:51 PM IST (Updated: 25 Feb 2022 6:51 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரில் மாணவர்களுடன் கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை வழங்கினார்.

திருவள்ளூரில் உள்ள கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 10 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 10-வது மற்றும் 12-வது பயிலும் கல்வியில் சிறந்து விளங்கும் 20 மாணவர்கள் பங்கேற்க ‘காபி வித்’ கலெக்டர் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை வழங்கினார்.

பின்னர் கலெக்டர் மாணவ, மாணவியர்களுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆறுமுகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பூபால முருகன், அம்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் செல்வ கணேசன், பள்ளி ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story