சாலையோரம் சிமெண்டு சிலாப்புகளை உலர வைப்பதால் விபத்து அபாயம்


சாலையோரம் சிமெண்டு சிலாப்புகளை உலர வைப்பதால் விபத்து அபாயம்
x
தினத்தந்தி 25 Feb 2022 6:55 PM IST (Updated: 25 Feb 2022 6:55 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் சாலையோரம் சிமெண்டு சிலாப்புகளை உலர வைப்பதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம், 

விழுப்புரம் நகரில் மழைக்காலங்களின்போது முக்கிய சாலைகளின் ஓரத்தில் மழைநீர் குட்டைபோல் தேங்குகிறது. குறிப்பாக விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையோரங்களில் மழைநீர் தேங்குவதால் அப்பகுதியில் உள்ள வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இதனை தவிர்க்கும் வகையில் மழைநீர் வடிந்து செல்ல ஏதுவாகவும் விழுப்புரம் நான்குமுனை சந்திப்பில் இருந்து மாம்பழப்பட்டு சாலை ரெயில்வே கேட் வரை சுமார் 1½ கிலோ மீட்டர் தூரம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிகள் கடந்த சில மாதமாக நடந்து வருகிறது.

இதற்காக சாலையின் இருபுறமும் சூழ்ந்திருந்த முட்புதர்கள் அகற்றப்பட்டு வடிகால் வாய்க்கால் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வாய்க்கால் மேல் மூடுவதற்காக சிமெண்டு சிலாப்புகள் அமைக்கப்பட்டு அதனை அங்குள்ள சாலையோரங்களில் உலர வைத்து வருகின்றனர். இவ்வாறு சாலையோரத்தின் பெரும்பகுதியில் சிமெண்டு சிலாப்புகள் உலர வைக்கப்பட்டு வருவதால் அங்கு எச்சரிக்கை பலகை ஏதாவது வைத்திருக்க வேண்டும். ஆனால் எச்சரிக்கை பலகை ஏதும் வைக்கப்படாததால் இரவு நேரங்களில் அவ்வழியாக வரும் வாகன ஓட்டிகள், விபத்தில் சிக்கும் அபாய நிலை இருந்து வருகிறது. எனவே அந்த சிமெண்டு சிலாப்புகளை அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டு வேறு ஏதேனும் பகுதியில் அமைத்து உலர வைத்துவிட்டு வடிகால் வாய்க்கால் கட்டி முடித்ததும் அதன் பிறகு கொண்டு வந்து மூடுவதற்கு சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?. பொறுத்திருந்து பார்ப்போம். 

Next Story