கஞ்சா வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


கஞ்சா வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 25 Feb 2022 8:06 PM IST (Updated: 25 Feb 2022 8:06 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

தூத்துக்குடி:
தூத்துக்குடி தாய்நகர் சுனாமி காலனியை சேர்ந்தவர் மரியான் (வயது 41). இவரை கஞ்சா பதுக்கிய வழக்கில் தாளமுத்துநகர் போலீசார் கைது செய்தனர்.  இதேபோன்று தூத்துக்குடி அய்யப்பன்நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக அதே பகுதியை சேர்ந்த அய்யநாதன் மகன் பாரதநாதன் என்ற குட்டி (35) என்பவரை சிப்காட் போலீசார் கைது செய்தனர். இவர்கள் இருவரும் பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர். 

இவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், மரியான், பாரதநாதன் ஆகிய 2 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினர்.

நடப்பு ஆண்டில் இதுவரை போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை வழக்கில் சம்பந்தப்பட்ட 14 பேர், போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவர் உள்பட 36 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.


Next Story