460 கிலோ புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்
460 கிலோ புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்
திருப்பூர்,
பல்லடம், முத்தூர் பகுதியில் வீடு, குடோனில் பதுக்கி வைத்திருந்த 460 கிலோ புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
புகையிலை பொருட்கள் பறிமுத
ல் திருப்பூர் மாவட்டத்தில் குட்கா, பான்மசாலா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க கலெக்டர் வினீத் உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழுவினர் திருப்பூர் மாவட்டம் முழுவதும் கடைகள் மற்றும் குடோன்களில் ஆய்வு செய்து வருகிறார்கள்.
பல்லடம் மற்றும் வெள்ளகோவில் நகர பகுதிகள், வட்டாரங்களில் 27 கடைகள் மற்றும் சந்தேகத்துக்கு இடமான குடோன்களில் ஆய்வு செய்யப்பட்டது. பல்லடம் அருகே கரைப்புதூர் சின்னக்கரை பகுதியில் ஒரு குடோனில் நடத்திய ஆய்வில் அங்கிருந்து 70 கிலோ புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மாதிரியை சேகரித்து பகுப்பாய்வுக்கு அனுப்பி வைத்தனர். கடைக்காரர் குடோன் பிடித்து புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தார். அந்த கடைக்காரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
வீட்டில் பதுக்கி வைப்பு
இதுபோல் வெள்ளகோவில் அருகே முத்தூர், புதுப்பாளையம் பகுதியில் ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த 390 கிலோ புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கொண்ட குழுவினர் பறிமுதல் செய்தனர். மாதிரிகளை பகுப்பாய்வுக்கு அனுப்பி வைத்து முடிவு வந்ததும் சம்பந்தப்பட்ட 2 பேர் மீது வழக்கு தொடரப்படும் என்று தெரிவித்தனர். புகையிலை பொருட்களை எங்கிருந்து வாங்கி வரப்பட்டது என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த ஒரு மாதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 16 கடைகளுக்கு ரூ.85 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டு அரசு கணக்கில் செலுத்தப்பட்டது. இதுபோன்ற சோதனைகள் தொடரும். சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
Related Tags :
Next Story